மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது கதவு, பன்னீர் நதிகள், கண்ணே கண்மணியே, உன்னை ஒன்று கேட்பேன், பூ பூவா பூத்திருக்கு, வேதம் புதிது, கவிதை பாட நேரமில்லை, இது ஒரு தொடர்கதை - இவையெல்லாம் எண்பதுகளில் ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்கள் என்பது நமக்குத் தெரியும். இன்னொரு முறை இந்தப் பெயர்களை வாசித்துப் பாருங்கள். எல்லாமே கவிதைகளின் இடையில் வரும் வரிகளைப் போல தெரியும். அந்நாளைய நாயகி அமலா நடிக்கும் படங்கள் என்றாலே, இயக்குநர்களுக்கு கவித்துவம் பொத்துக் கொண்டு வரும். சில நடிகைகளின் கட்டுக்கோப்பான உடல் அழகை ரசித்திருப்போம். சில நடிகைகளின் நேர்த்தியான நடிப்பை ரசித்திருப்போம். சில பேருடைய ஸ்டைலான உடல்மொழியை ரசித்திருப்போம்.
ஒரு முகத்தை ரசித்து நேசிப்பது என்பது மிகக்குறைவான நடிகைகளுக்கு மட்டுமே. அவர்களில் ஒருவர் அமலா. அவரது முகத்தில் ஒளிந்திருக்கும் குழந்தைத்தனத்தின் குறும்புதான் அவரது பலம். எனவேதான் அவரை கவர்ச்சியான உடையில் பார்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு தோன்றவில்லை. அவரும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. டி.ராஜேந்தரின் இயக்கத்தில் மைதிலி என்னை காதலி திரைப்படத்தில் அறிமுகமானதில் தொடங்கி, திருமணமாகி குடும்பத்தில் செட்டில் ஆகும்வரை தென்னிந்திய சினிமாவில் அமலாவுக்கு பின்னடைவு என்பதே இல்லை. ஒரே இரவில் புகழின் உச்சியில் அமர்ந்தவர் இந்த கலாக்ஷேத்திர நாட்டியப் பள்ளியின் மாணவி. தமிழ் சமூகத்துக்கு சம்பந்தமேயில்லாத பெங்காலிப் பொண்ணு. எப்படியோ நம் அனைவரின் மனதிலும் நீங்காத இடத்தைப் பிடித்தார்.
புகழின் உச்சியில் இருக்கும்போதே தெலுங்கு ஹீரோ நாகார்ஜுனாவை திருமணம் செய்துகொண்டு முழுமையான குடும்பத்தலைவியாக தன்னை மாற்றிக் கொண்டார். பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவின் மருமகள் என்கிற அந்தஸ்தை, எவ்வித குறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். நாகேஸ்வரராவின் அக்கினேனி குடும்பம் ஆந்திராவில் பிரபலம். அந்தக் குடும்பத்தின் புகழ் தன்னால் குன்றிவிடக் கூடாது என்கிற காரணத்துக்காகவே கேரியரில் உச்சத்தில் இருந்தாலும் தனக்கு வந்த பெரிய சினிமா வாய்ப்புகள் அத்தனையையும் உதறினார். ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்கிற பழமொழி இவரது விஷயத்தில் பொய்யானது.
அமலா, அதன்பிறகு ஒரு சமூகசேவகியாக ஹைதராபாத்தில் விஸ்வரூபம் எடுத்தார். புளூகிராஸ் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு வாய்பேச முடியாத விலங்கினங்களுக்காக உரிமைக்குரல் கொடுத்தார். ஆந்திராவில் இன்றும்கூட யாராவது ஆட்டையோ, மாட்டையோ அடித்தால் பக்கத்தில் இருப்பவர்கள் விளையாட்டாக, “உன்னை அமலா கையிலே பிடிச்சிக் கொடுத்துடுவேன்” என்று சொல்லுமளவுக்கு ஜீவகாருண்யத்தில் பெயர் பெற்றார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கில் லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல் படத்தில் மட்டும் சில காட்சிகளில் நடித்தார் அமலா.
இதில் நடிக்க முடியாது என்றுதான் இயக்குநர் சேகர் கம்முலாவிடம் மறுத்துக் கொண்டிருந்தார். “நீங்கள் நடிக்காவிட்டால், இந்தப் படத்தையே எடுக்க மாட்டேன்” என்று பதிலுக்கு இயக்குநர் குண்டுபோட, அன்புக்காக நடித்துக் கொடுத்தார் அமலா. நாலே காட்சிகள்தான். இருந்தாலும் இவ்வளவு ஃபோர்ஸான கம்பேக் வேறு எவருக்காவது கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. அமலாவை நோக்கி மீண்டும் வாய்ப்புகள் குவிந்தன. அழகான புன்னகையால் அத்தனை புகழையும், பணத்தையும் மறுத்தார். நிஜமாகவே அமலாவின் லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல்!

No comments:
Post a Comment